உடன் அமுலாகும் வகையில் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

Saturday, May 8th, 2021

நாட்டில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டி, வத்தளை, ஹேகித்தை மற்றும் பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், மாபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட கெரங்ஹா பொக்குன, கல்லுடுபிட, மத்துமஹல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்தை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு காவல்துறை அதிகாரப் பிரிவின் வித்யாசார கிராம சேவகர் பிரிவில் உள்ள போசிறிபுர பகுதியும் மஹா வஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்துகமை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டதொலுவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் மத்திய மற்றும் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (08) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மஹரகம காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட அரவ்வல மேற்கும், பிலியந்தலை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட நிவந்திடிய மற்றும் மாம்பே கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், காலி மாவட்டத்தின் ஹபராதுவை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட கொக்கல – 1 மற்றும் 2, மீஹாகொட, மல்லியகொட, பியதிகம மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: