சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Tuesday, November 8th, 2022

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், 9 மாவட்டங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் ஒரு வீடு முழுமையாகவும் 161 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: