சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

Sunday, September 26th, 2021

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் குறித்த பொருட்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தையில் பால் மா பற்றாக்குறை கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் பால் மா இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் சந்தையில் பால் மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு இருப்பதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, லாஃப் எரிவாயு பற்றாக்குறை இருக்கும் போது விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. எனினும் சந்தையில் லாஃப் கேஸ் பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மூன்று நாட்களுக்கு மேல் எனின் பேருந்து அனுமதிப்பத்திரம் இரத்து - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...