சீனியின் விலை அதிகரிக்காது – நிதி அமைச்சு!

Wednesday, September 19th, 2018

சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கு இது வரையில் காணப்பட்ட வற் வரி 15 வீதத்தினாலும், சுங்கத்தீர்வை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட மாத்திரத்தில் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் சீனி உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவடைந்துள்ள நிலையில், அந்த நலன் நுகர்வோரை சென்றடையவில்லை என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சீனியின் விலையை உயர்த்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

Related posts:

தீர்மானங்களைச் செயற்படுத்துவதில் தவிசாளருக்பு ஆர்வம் கிடையாது - ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சப...
இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் - ஜனாதிபதி ர...
வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்...

அடுத்தவாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று செயற்படும் - பொதுச் சேவை, மாகாண சபைகள் ...
புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல் – சில தினங்களுக்குள் நடை...
பிரபாகரனின் பிறந்த தினத்தை நினைவேந்தல் என்று அனுஷ்டிக்க இடமளிக்க முடியாது - எதிர்காலத்தில் அவ்வாறு ச...