சீனாவுக்கான புதிய தூதுவராக பாலித கோஹன நியமனம்!

Monday, September 7th, 2020

சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கின்றார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதுடன் முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் அவர் இதற்காக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
உக்ரனில் இருந்து வெளியேற இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு வீசா - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித...