சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!

Tuesday, January 11th, 2022

சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்பு பட்டியலிலிருந்து இலங்கையின் மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை தரக்குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதனால் குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணத்தொகையை செலுத்துவதற்குக் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்திருந்தது. இந்த நிலையில் மக்கள் வங்கியைச் சீனத் தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்திருந்தது.

எவ்வாறாயினும், இந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த தினம் 6.8 மில்லியன் டொலர்கள் குறித்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து மக்கள் வங்கியை சீனத்தூதரகம் தமது கறுப்பு பட்டியலிலிருந்து நீக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: