சீட்டின் சுப்பர் பரிசுத் தொகை அதிகரிகப்படும் – லொத்தர்!

Thursday, January 5th, 2017

லொத்தர் சீட்டின் விற்பனை அதிகரிப்பிற்கு சுப்பர் பரிசுத் தொகை அதிகரிக்கப்படுமென்று தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன தெரிவித்துள்ளன.

லொத்தர் சீட்டிழுப்பு விற்பனை வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் றுமேஸ் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லொத்தர் விற்பனை நடவடிக்கை பகிஷ்கரிப்பில் சிறு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி சர்மிளா பெரேரா தெரிவித்தார்.

பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் 21 சதவீதமானோரே ஈடுபட்டுள்ளனர். இதற்கான தரகுப் பணத்தை அதிகரிக்குமாறு கோரிய போதிலும் தற்போதைய வரி மற்றும் ஏனைய சட்ட விதிகளின் கீழ் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் திருமதி சர்மிளா பெரேரா குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாறை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் லொத்தர் சீட்டு விற்பனை வழமை போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Lottery Board

Related posts:

மாணவர்களின் நலன் கருதி போட்டோ பிரதி இயந்திரம் பெற்றுத்தாருங்கள்: ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவி...
பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - கல்வி அமைச்சு !
ஊரடங்கு காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி - சுகாதார அமைச்சினால் வெளிளிடப்பட்டது வழிகாட...