மாணவர்களின் நலன் கருதி போட்டோ பிரதி இயந்திரம் பெற்றுத்தாருங்கள்: ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் ஸ்தான சி.சி.த.க.பாடசாலை கோரிக்கை

Sunday, April 10th, 2016

கொக்குவில் ஸ்தான சி.சி.த.க.பாடசாலை வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்வதற்காக தமது பாடசாலைக்க ஒரு போட்டோ பிரதி இயந்திரம் கொள்வனவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்தள்ளது.

பாடசாலையின் அதிபர் பு.சண்கராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்தே குறித்த கோரிக்கை அடங்கிய மனுவை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 70 மாணவர்கள் கல்வி கற்பதுடன். பிள்ளைகளின்  கற்றல் கற்பித்தலை விருத்தி செய்வதற்குரிய  செயற்பாடுகளுக்காக போட்டோ பிரதிகள் செய்வதிலேயே கூடிய தொகை பணம் செலவு செய்யப்படுகின்றதாகவும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ஒரு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொள்ள உதவி செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: