சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறையில் மாற்றம் – மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் பணிகள் இடம்பெறும் எனவும் அறிவிப்பு!

சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுதல் அமுலாகும் வகையில் மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.15 வரையில் அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுவார்கள் என சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் சிவில் விமான சேவை அதிகார சபைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
ஆவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான்!
நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
|
|