சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வலியுறுத்து!

Thursday, March 11th, 2021

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருடாந்த சிவராத்திரி வழிபாடுகள் இன்று  நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அத்துடன் கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதனிடையே

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்று மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலைமுதல் ஆலையத்தை சூழ்ந்த பகுதிகளில் புகையூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் சுமார் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியமை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

மேலும் பாலாவியில் நீராடுவது, தீர்த்தம் எடுப்பதும், அங்காடி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: