தைரொயிட் ஓமோன் சோதனை அவசியம் – குழந்தை மருத்துவ நிபுணர் ஜெயபாலன் அறிவுறுத்து!

Monday, November 28th, 2016

பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தைரொயிட் ஓமோன் தொடர்பான ரி.எஸ்.எச்.சோதனைக்கு உட்படுத்தாமால் குழந்தைகளை வீடு செல்ல அனுமதிக்க வேண்டாம். பெற்றோர், சுகாதார அதிகாரிகள் இதில் கூடிய கவனம் எடுக்கவேண்டும். என யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தை மருத்துவ நிபுணர் சி.ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4மாதங்களில் 4குழந்தைகள் பிறக்கும்போது தைரொயிட் ஓமோன் குறைப்பாட்டுடன் பிறந்துள்ளமை இனங்காணப்பட்டது. பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்த 24மணி நேரத்திலிருந்து 72மணி நேரத்துக்குள் குதிக்காலின் குருதி எடுக்கப்பட்டு ரி.எஸ்.எச் சோதனைக்காக கொழும்பில் உள்ள அவசர எம்.ஆர்.ஜ. ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்படுகின்றது. இந்த நடைமுறை வடக்கு மாகாணத்தில் கடந்த 4 மாதங்களாக நடைமiறில் உள்ளது. குழந்தை எந்த மரத்துவமனையில் பிறந்தாலும் பிறந்த 24மணி நேரத்திலிருந்து 72மணி நேரத்துக்குள் ரி.எஸ்.எச் சோதனை கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும். தைரொயிட் ஓமோன் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதன் குறைபாடு காரணமாக பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக் குன்றி மந்த புத்தி நலைக்க ஆளாகலாம். நாங்கள் தைரொக்சின் மாத்திரையை குழந்தை பிறந்த 2 வாரத்துக்ளு; வழங்கத் தொடங்கவதன் மூலம் பிள்ளைகளின் மூளை வளர்ச்சிப் பாதிப்பைத் தடுக்க முடியும். இலங்கையில் பிறக்கும் 1500 குழந்தைகளில் ஒரு குழந்தைக்க இந்த நோய் இருப்பது பண்டபிடிக்கப்படது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கடந்த 4 மாதங்களுக்குள் 2500 குழற்தைகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 4குழந்தைகள் தைரொயிட் ஓமோன் குறைப்பாட்டுடன் பிறந்துள்ளமை கண்டறியப்பட்டது. இவர்களுக்கான சிகிச்சை உடனே வழங்கப்பட்டது. இந்த குழற்தைகளுக்கு தொடர்ச்pயாக கிளினிக் தொடரும். இதனால் தைரொயிட் ஓமோன் குறைப்பாட்டில் இருந்து மீள்வதுடன் நல்ல மூளை வளர்ச்சியையும் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றன – என்றார்.

h5550930

Related posts: