கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 1800 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளது இந்தியா – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நிதியானது இலங்கையில் 8 துறைகளுக்கு இவ்வாறு கடன்வரிகப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

அதன்படி 1850.64 மில்லியன் டொலர்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த கடன்வரிகள், தொடருந்து, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி, பெற்றோலியம் மற்றும் உரம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அத்துடன் அயலில் உள்ளவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா, தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடன்வரிகளுக்கு அப்பால் இந்தியா, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகைளையும் வழங்கியுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: