18 ஆயிரம் இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக பணி நீக்கம்!

Friday, July 15th, 2016

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 18 ஆயிரத்து 417 இராணுவ வீரர்கள்  பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதில், 16 ஆயிரத்து 920 இராணுவ சிப்பாய்களும் 868 கடற்படையினரும் 629  விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இதேவேளை பொதுமன்னிப்பு காலத்தில் ஆஜராகாத இராணுவ வீரர்களை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் உத்தியோகபூர்வமாக பதவி விலகுவதற்கு அரசாங்கத்தால் கடந்த ஜீன் மாதம் 13 ஆம் திகதி முதல் இம்மாதம் 12 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றயி இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் வருகைத் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த பொதுமன்னிப்பு காலத்தில் ஆஜராகிய 18 ஆயிரத்து 417 இராணுவ வீரர்களே சட்டரீதியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Related posts: