சிறைச்சாலையின் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரிகள், சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகிய பதவிகளுக்கு 1275 பேரினை புதிதாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கீழ், ஆண் காவலர்கள் 1068, பெண் காவலர்கள் 110, இரண்டாம்-வரிசை ஆண் சிறைச்சாலைக் காவலர்கள் 69, இரண்டாம்-வரிசை பெண் சிறைச்சாலைக் காவலர்கள் 10, இரண்டாம்-வரிசை ஆண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 15 மற்றும் இரண்டாம்-வரிசை பெண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 03 ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பிலான விண்ணப்பங்கள் இன்று அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவுள்ளதோடு, விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீண்டும் திரும்புவோம் என்று நம்பிக்கையிழந்து இருந்தோம் - கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள்!
நீர் உயிரின உற்பத்திக்கு சீனா விருப்பம்!
நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரும் வல்லமை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உண்ட...
|
|