சிறைக் கைதிகளுக்கு STF பாதுகாப்பு வழங்க நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!
Friday, March 3rd, 2017
கொலை அச்சுறுத்தல் உள்ளவர்களையும், பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளையும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதிமன்றத்தக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
புகையிரத விபத்து: கடந்த இரண்டு வருடங்களில் 323 பேர் பலி!
அதிகரிக்கும் டெங்கு நோய் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
|
|
|


