சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை தரமுயர்த்த திட்டம்!

நாட்டில் தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், சில சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வியாபார நோக்கில் இயங்கி வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அனைத்து சிறுவர் பாதுகாப்பு நிலையங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நாடு முழுவதிலும் முறையற்ற விதத்தில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
தோழர் மகேஸ்வரனின் தாயார் செங்கமலம் தம்பிப்பிள்ளை காலமானார்!
நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!
ஒருங்கிணைப்பு குழு தலைவரின் பரிந்துரைகள் மக்களுடையதல்ல – அதை எமது சபை நிராகரிக்கிறது – சிவகுரு பாலகி...
|
|