சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளை மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!
Tuesday, November 7th, 2023
கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த போகத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதிக்கு டீசல் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
உரம் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக உரிய நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் இரண்டு நாட்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 40 லிட்டர் டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


