மக்களுக்கு விழிப்புணர்வு தேவை : கிளிநொச்சி அரசாங்க அதிபர்!

Wednesday, August 2nd, 2017

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில், அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக, அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அரசாங்க அதிபரிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், தாங்களாக உணர்ந்து திருந்திக் கொள்ளவேண்டும். சிறுவர் துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள் போன்ற செயற்பாடுகளுக்கு, சட்டவிரோத மதுப்பாவனையே முக்கிய காரணியாக உள்ளது.

சட்டவிரோத மதுபான உற்பத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் மிக மோசமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட, சில தடைகள் காணப்படுகின்றன. இதற்கு, கிராம ரீதியில் மக்கள் ஒன்றுதிரண்டு, விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அவற்றை நிறுத்தும் போது, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கத் தயாராகவே இருக்கின்றோம்” என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts: