சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு – சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன எச்சரிக்கை!

Friday, March 10th, 2023

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன குறிப்பிட்டுள்ளார்.

விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கின் அம்பாறை பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்து...
தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை –...