பிராந்தியங்களே இல்லாத நாட்டில் ஒருமித்தநாடு என்ற சொல் எதற்கு – இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்

Saturday, October 28th, 2017

பிராந்தியங்களே இல்லாத நாட்டில் பிராந்தியங்களின் கூட்டால் ஒன்று சேர்ந்த நாடு எனும் அர்த்தத்தைக் கொடுக்கும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் சந்தேகம் எழுவது நியாயமானது. இதற்குரிய பதிலை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க எமது மாநாட்டில் தெளிவுபடுத்துவார் என்று நம்புகின்றோம்என  இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் டி.சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அடிப்படைவாத விடயங்களை பிரதிபலிக்கும் எந்த அரசமைப்புத் திருத்தம் அல்லது விடயத்துக்கும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஆதரவளிக்காது.

மகாநாயக்க தேரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். தற்போது இடைக்கால அறிக்கை மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தொடர்பில் நாம் எமது நிலைப்பாட்டை அரசுக்கு அறிவித்துள்ளோம். அதில் விடயங்களைத் தெளிவுபடுத்தவும் கோரியுள்ளோம். இதற்கான பதிலை சட்ட மாநாட்டுக்கு வரும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு வழங்குவார் என்று நாம் எதிர் பார்க்கின்ளோம். இடைக்கால அறிக்கையில் அரசமைப்புத் தொடர்பில் நாம் கொடுத்த யோசனைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அரசமைப்பு விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனைய மதங்களின் தலைவர்களினதும் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். அப்போதே அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டுக்குச் சிறந்த அரசமைப்பை உருவாக்க முடியும்  – என்றார்

Related posts: