வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!
Wednesday, August 9th, 2023
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தின் பண்ணையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா, வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல்வாதிகளை மோசமாக விமர்சித்த ஜனாதிபதி மைத்திரி!
நாடு முழுவதும் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் மின்சார சபையின் பணியாளர்கள்!
கிழக்கு அபிவிருத்தித் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல...
|
|
|
செட்டிக்குளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட...
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்...
பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவு - வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாள...


