செட்டிக்குளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் – மக்ள் நன்றி தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

முன்பதாக வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கான உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி கடந்தவாரம் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதைஅடுத்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் குறித்த பிரச்சினைனக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பக் குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபன்  உறுதியளித்திருந்தார்

இதையடுத்து குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் தேவை பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்றிருந்த திலீபன் உடனடியாக அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்திருந்தனர்.இந்நிலையில் தற்போது குறித்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியரகள் தற்போது பணிக்கமர்த்தப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் குறித்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுத்தமைக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: