வவுனியா மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலிபன் தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021

வவுனியா மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபனின் முயற்சியால் தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளன்ளது.

இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தின் வேலன்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட வேலன்குளம், மடுக்குளம், சின்னத்தம்பனை, கோவில்மோட்டை ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொண்டுவரும் பொதுப்பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைககள் தெர்டர்பில் கலந்துரையாடலொன்று துறைசார் அதிகாரிகள் பிரசன்னத்துடன் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் வவுனியா பிரதேச செயலாளர், கமநலசேவை திணைக்க்கள உதவி ஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் சில பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகளும் பெற்றுக்கொடக்கப்பட்டன.

குறிப்பாக நீண்டகால பிரச்சனையான மடுக்குள காணிப் பிரச்சனைக்கு துரிமாக தீர்வுகாண்பதறந்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த கிராம இளைஞர்களுக்கு புதிய மைதானத்திற்கான காணி ஒன்றும் இனங்காணப்பட்டு அதனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோன்று இப்பகுதிகளுக்கு நீண்டகாலமாக போக்குவரத்து சேவையை பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைக்கு அமைய உடனடியாக பேருந்து சேவையை வழங்குமாறு பிராந்திய முகாமையாளருக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது.

அத்துடன் வன வளத்துரையினருடன் இணைந்து எதிர்வரும் வாரத்தில் எல்லைகற்கள் இடப்பட்ட பகுதியில் வயல் செய்வதற்கும் மேய்ச்சல்தரைக்கான இடத்தினை தெரிவு செய்வதற்கும் முடிவு குற்த்த கலந்தரையாடலின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் நீர்ப்பாசன திணைக்களம் எல்லை கற்களை பதித்திருந்தாலும் வழமைபோல் வயல் செய்வதற்கு அனுமதியளிக்க மாவட்ட செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே வீதி, நன்னீர் மீன்பிடி, குடிநீர் பிரச்சினை, யானை வேலி மற்றும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் நேரில் சென்று ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: