சிறுகைதொழில்களில் கூட்டுறவுச் சங்கங்கள் ஈடுபட வேண்டும் யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவிப்பு
Thursday, January 26th, 2017
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நுகர்ச்சி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்காமல் சிறுகைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தற்போதைய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியாபார நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது.
தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் முன்பு ஒரு காலத்தில் கொடிகட்டி; பறந்தது. தற்போது இந்தச் சங்கத்தில் வியாபார நடவடிக்கைகள் குறைந்துள்ளன. வலி.வடக்கில் மீள்குடியமர்த்த மக்களின் வசதி கருதி அந்தப் பகுதிகளில் கூட்டுறவாளர் கிளை நிலையங்களைத் திறக்க வேண்டும் . நுகர்ச்சி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சங்கங்கள் சிறுசிறு கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும். எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் காங்கேசன்துறைப் பிரதேச மீனவர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள். எனத் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


