2 ஆவது தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு – மருத்துவ வல்லுநர்கள் கருத்து!

Monday, June 28th, 2021

கொரோனாவிற்கு எதிராக 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் 90% பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது, டெல்டா பிளஸ் வகை வைரஸ் பரவி வருகிறது.

இந்த வகை வைரஸ், டெல்டா வைரசை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா 3-வது அலை வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 3 ஆவது அலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியிருந்தால் போதுமானதாக இருக்காது என்று மருத்துவ வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மூன்றாவது அலைக்கு எதிராக போராட 33% எதிர்ப்பு சக்தி மட்டுமே கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 4% மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளனர், 18% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: