சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது – ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் விரைவில் நீக்கப்படும் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022

நாட்டில் காணப்பட்ட சிமெந்துக்கான தட்டுப்பாடு தற்சமயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோன்று கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்..

தற்போது துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் பொதுமக்களுக்கு பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒரு கிலோ சம்பா அரிசியை 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

காலி, உனவட்டுன பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: