சித்திரைப்  புத்தாண்டினை முன்னிட்டுக் கிராமிய சமுர்த்தி வங்கிகளில்  இலகு கடன் திட்டங்களும் கொடுப்பனவுகளும்  வழங்கப்பட்டன

Wednesday, April 20th, 2016

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமையச்  சமூகவலுவூட்டல் நலன்புரி அமைச்சின் எற்பாட்டில் சித்திரைப்  புத்தாண்டினை முன்னிட்டு கடந்த  திங்கட்கிழமை  (18-04-2016) கிராமிய சமுர்த்தி வங்கிகளில் கிராமிய மக்களுக்கான கொடுப்பனவு மற்றும் அவர்களுக்கான இலகுகடன் திட்டங்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமிய சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றன.

இதற்கான நிகழ்வு நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்வியங்காடு கிராமிய சமுர்த்தி வங்கியில் அதன் முகாமையாளர் ந.சிவகுமார் தலைமையில் நேற்று  நடை பெற்றது.

இதில் 300 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள்  இலகு கடன்திட்டத்தினையும்,மற்றும் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொண்டனர். இப்பிரதேசத்தில்  தமது சுயதொழிலுக்கான சிறுவியாபார உற்பத்தி கைத்தொழிலுக்கான இலகுகடன் திட்டம் மற்றும் கோழிவளர்ப்பு, மனைப்பொருளாதார உற்பத்திகள்,பனை சார்ந்த உற்பத்திகள்,உள்ளூர் கைத்தொழில் உற்பத்திகள் போன்ற செயற்பாடுகளுக்குக் குறித்த  உதவித்திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன

19b73413-4275-4431-ac4e-c19954326daa

Related posts: