குவைட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்கையர்கள் மீட்பு!

Monday, January 9th, 2023

குவைட்டில் ஈரான் எல்லையை அண்டிய பாலைவனத்தில் இயங்கி வந்த பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிக்கப்பட்டு, சம்பளம் இன்றி வேலைக்கு தள்ளப்பட்ட ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் இளைஞர்கள் அவர்களது இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கிண்ணியாவில் உள்ள சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக குறித்த குழுவினர் குவைட் நோக்கி சென்றுள்ளனர்.

அவர்கள் பணிபுரிந்து வந்த பண்ணையை குவைட்டில் ஷேக் என்பவர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இலங்கையர்கள் குழுவினால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீட்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பணியை குவைட்டின் பல அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.

இந்த குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சட்டவிரோத முகவர்கள் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: