பேருந்து பயணிகளுக்காக அறிமுகமாகும் கையடக்கத் தொலைபேசிச் செயலி!

Tuesday, July 7th, 2020

பேருந்து போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசி செயலியொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்றையதினம் (07) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

MYBUS.SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

குறித்த செயலி மூலம் பயண தூரம், பேருந்து கட்டணம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் எனவும் GPS தொழில்நுட்பத்தினூடாக பேருந்து பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்துகளில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் Online ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: