சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்பட்ட நிலையில் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Tuesday, December 12th, 2023
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் இலங்கையை சூழவுள்ள சிறிய தீவுகளை ஒன்றிணைத்து சிறு தீவுகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை நாமும் நிராகரத்திருந்தோம். அந்த எதிர்ப்புகள் வெளியானதை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆயினும் கைவிடப்பட்ட அந்த விடயத்தை உள்நோக்கத்தின் அடிப்படையில் சிலர் ஞாபகப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். அவ்வாறு ஒரு திட்டம் தற்போது இல்லை.
எவ்வாறு சிங்கள “சிறீ” க்கு எதிர்ப்பு காட்டப்பட்டபோது அதனை அரசாங்கம் மௌனமாக நீக்கியது போன்று இந்த விடயமும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.
ஆனால் இத்திட்டம இரகசியமாக முன்னெடுக்கப்டுபடுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள சூழலிலும் அவ்வாறான ஒரு திட்டம் அரசிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடல்உணவு ஏற்றுமதியால் வருமானம் அதிகரிப்பு!
இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை இல்லை என குற்றச்சாட்டு!
நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!
|
|
|


