சிரேஷ்ட பிரஜைகளுடன் ஒப்பிடும்போது சிறுவர் தொற்றுகள் குறைவு – சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான சிறுவர்கள் மாத்திரமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பின் போதே சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

தற்போதைய தரவுகளின்படி சிறுவர்கள் கொவிட்-19 தொற்று மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகையால் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதற்காக போதுமான தரவுகள் அவர்களிடம் இல்லாததால், சில சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தரவுகள் ஆதரிக்கும் பட்சத்தில், தடுப்பூசிகளை அவர்களுக்கு வழங்க தயங்கமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: