சாவகச்சேரி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வடிகாலமைப்புக்கள் சீரின்மையால் தொற்று நோய்கள் ஏற்படும் அச்சம்!

Thursday, April 19th, 2018

சாவகச்சேரி பிரதேச சபையின் பெரும்பாலான கிராமங்களில் குளங்கள் இருந்தும் முறையான வடிகால் அமைப்புகள் இல்லாதகாரணத்தால் மழைகாலங்களில் மழை வெள்ளம் பல இடங்களிலும் தேங்கி நின்று நோய் பரவ ஏதுவாகின்றது என்று மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையைத் தடுக்க நீர்ப்பாசனத் திணைக்களம், பொறியியல் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் மத்திய மாகாண அரசுகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கிராமங்களில் உள்ள குளங்களைச் சீரமைப்பதோடு தொடர் வடிகால்களை அமைத்து மழை நீர் தேங்காதவாறு செய்யவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகரில் வடிகால்கள், பெருந்தெருக்கள் அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள போதிலும் முறையான கட்டுமானம் மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் நகரின் வெளிப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாக காணப்படுகின்றது.

அதனால் பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறும் நிலை வருடாந்தம் ஏற்படுகிறது. அத்துடன் மிருசுவில் சில பகுதிகள் உசன், மந்துவில், இயற்றாலை, சரசாலை, மட்டுவில், கைதடி, நுணாவில், நாவற்குளி போன்ற இடங்களிலும் குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே குறித்த பிரச்சினைக்கான தீர்வினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: