சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமை” – நடைமுறைக்கு வரவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, December 27th, 2022

வாகனத்தை செலுத்தும்போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி மெரிட் புள்ளி முறைமையை” நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீதியில் சாரதிகள் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை வழங்குதல் மற்றும் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

“2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஓட்டுநர் தவறுகளுக்கான புள்ளி முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம், அதன்படி, நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு. 20 புள்ளிகள் வரை வழங்கப்படும் முறை செயல்படுத்தப்படும். 20 புள்ளிகள் பெற்ற ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

அவ்வாறு இரத்து செய்யப்பட்ட காலத்துக்கு பின், மீண்டும் ஓட்டுனர் உரிமம் பெற அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டே இத்திட்டத்தை அமுல் செய்ய எதிர்பார்க்கிறோம்.இது தொடர்பான நமது தற்போதைய அடிப்படை வழிமுறை தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலும், ஜனவரியில் அமைச்சரவை அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: