சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்பு!

Saturday, March 31st, 2018

சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்புஇம் முறை கல்வி பொதத்தர சாதாரண தரப் பரீட்சையின் பெறு பேறுகள் அடிப்படையில் சித்தியடைவு வீதம் அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் அனைத்து பாடங்களில் ஏ(9ஏ) சித்திகளை பெற்றுள்ளனர் எனவும் கணித பாடத்தில் சித்தியடைந்த வீதம் இம்முறை அதிகரித்துள்ளது எனக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது 2017 ஆம் ஆண்டு சாதாரண தர பெறுபேற்றின் படி உயர் கல்வியைத் தொடர்வதற்கான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது

2016 ஆம் ஆண்டில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு 69.94 சத வீத மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமையுடன் 2017 ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் படி 73.05 சதவீத மாணவர்கள் உயர் கல்வியை தொடரக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர் இதன்படி இம்முறை உயர் கல்வியை தொடரக்கூடியவர்களின் எண்ணிக்கை 3.11 சதவீத்தால் அதிகரித்துள்ளது இதேவேளை 2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் கணிம பாட சித்தி 4.43 சதவீதத்தில் அதிகரித்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 2016 ஆம் ஆண்டிலிருந்து கணித பாடத்தில் சித்தியடைந்த மாணவர் வீதம் 62.81 வீதமாக இருந்தமையுடன் 2017 ஆம் ஆண்டில் 67.24  சதவீதமாக அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதே வேளை அனைத்து பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது

கடந்த வருடம் 8  ஆயிரத்து 224 மாணவர்கள் அணைத்து பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றிருந்தனர் இம்முறை 9 ஆயிரத்து 960 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும்ம ஏ  சித்திகளை பெற்றுள்ளனர்

என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: