வியட்னாம் விஜயத்தை விரைவில் நிறைவுசெய்து நாடு திரும்புவதற்கு பிரதமர் தீர்மானம்

Monday, April 17th, 2017

மீதொட்டமுல்லயில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்னாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விரைவில் தமது விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர், அங்கிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) மதியம் வியட்னாமை சென்றடைந்தார். வியட்னாம் பிரதமர் குயன் ஷூஎன் பூவின் அழைப்பை ஏற்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார்.

பிரதமரை வரவேற்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், மற்றும் இருநாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட சிலர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது பிரதமருக்கு விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

வியட்னாம் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிரதமரின் விஜயம் எதிர்வரும் 19 ஆம் திகதி நிறைவடைய இருந்த போதிலும் மீதொட்டமுல்லயில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அவர் விரைவாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.

Related posts: