சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27 இல் ஆரம்பம் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!
Thursday, March 11th, 2021
கடந்துமுடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதன்போது நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
Related posts:
கடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் இலங்கை!
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது !
தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, உள்நாட்டுத் தொழில்முனைவோரு...
|
|
|


