கடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் இலங்கை!

Tuesday, April 17th, 2018

கடலில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் ஏற்படும் சூழல்பாதிப்பை தடுக்கும் பிரித்தானியாவின் வேலைத்திட்டத்தில் இலங்கையும் இணைந்துள்ளது என பிரித்தானிய பிரதமர்தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இலங்கை, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் கானா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதற்காக பிரித்தானிய அரசாங்கம், 61.4 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் சமுத்திரத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் சுத்தப்படுத்தல் என்பன இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts: