சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020

எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவெடுக்கப்படுமென கல்வி அமைச்சர் ஜி எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர், தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து கவனம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை அடுத்து அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மீண்டும் திறப்பதை சில நாட்களுக்கு ஒத்திவைக்க அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்வி நிலையங்கள் சமுக இடைவெளியை கடைப்பிடிக்கமாட்டா என்பதை அடிப்படையாக வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: