காய்ச்சல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை !

Sunday, August 1st, 2021

சமகாலத்தில் இலங்கையில் ஏற்படும் காய்ச்சல் தொடர்பில் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறும் நோயாளிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உடலில் வெப்பத்தை குறைத்துக் கொள்வதற்காக வேறு மருந்துகள் பயன்படுத்துவதனை தவிர்ப்பது மிகவும் முக்கியம் என டெங்கு நோய் தடுப்பு பிரவின் விசேட வைத்தியர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு வைரஸ் தொற்று, கொவிட் தொற்று வேகமாக பரவுவதனால் டெங்கு மற்றும் கொவிட் என இரண்டும் தொற்றிய நபர்கள் இருக்க கூடும்.

இதனால் காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த ஒரு மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் எவருக்காவது குறித்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: