சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை!
Saturday, December 29th, 2018
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு மிகவும் அவசியமான ஒரு பிறப்புச் சான்றிதழாக இது அமையும் என்று பதிவாளர் நாயகத்தின் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்தார்.
மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்டத்தின் கீழ்வரும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் தற்சமயம் விநியோகிக்கப்பட்டுவரும் பிறப்புச்சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை அல்ல. நாடளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில், பதிவாளர் ஒருவரது அல்லது ஆணையாளர் ஒருவரது கையொப்பத்துடன் புதிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது.
Related posts:
இன்று பிரதமர் ரணில் ஹொங்கொங் பயணம்!
பிலியந்தலை துப்பாக்கிச்சூடு; சிறுமி மரணம்!
இயக்கச்சியில் குண்டு வெடிப்பு - ஒருவர் படுகாயம் - வெடிகுண்டு தயாரிப்பு முயற்சி என சந்தேம்!
|
|
|


