இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

Friday, September 10th, 2021

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதனடிப்படடையில் கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள்  உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன..

அத்தோடு பானங்கள், பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர், வயின் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புதிய விதிகள் சீஸ், வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளுக்கும் பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பினால் மேற்படி பொருட்களுக்கான இறக்குமதியில் தாக்கம் ஏற்படும் அதேசமயம் அந்தவகை பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: