கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு – தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு!

Sunday, November 1st, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.

இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள், தாதிக்கு தொற்று உறுதியானது. அத்துடன் முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்த, மருதானை, கிரான்ட்பாஸ் ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 பொலிஸாருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கொழும்பு குற்றப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸாரில் 235 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்து குறித்த 235 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளாகியுள்ளனர். நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,185 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 4,399 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,244 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: