சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை விஜயம்!
Tuesday, February 28th, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் க்றிஸ்டின் லகார்டே ( Christine Lagarde) அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரும் க்றிஸ்டின், பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இவரது வருகை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில், திறைசேரி அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வாகன அபராதம் செலுத்த புதிய முறை அமுல்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது கொரோனாவே காரணம் - வேறெந்த அரசியல் நோக்கங்களும் கிடையா...
சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு - சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன எச்சரிக்கை!
|
|
|


