யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை அவசரமாகக் கோருகின்றார் அரச அதிபர் மகேசன்!

Sunday, October 25th, 2020

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் 2 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அந்தவகையில், நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் தற்போது வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றதன் அடிப்படையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் நேற்றையதினம்வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தியிருக்கின்றோம். அத்துடன் படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. தனிமைப்படுத்தப்படுவோர் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.

கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இந்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது மருதங்கேணியில் அமைந்துள்ள கோரோனா சிகிச்சை நிலையத்தில் தற்போது 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இதனைவிட வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஏற்கனவே சீதுவ பகுதியிலிருந்து பேருந்தில் பயணம் செய்த 9 பேரும் அதனை விட அதன் சாரதி, நடத்துனர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

அத்துடன் யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் தற்பொழுது ஏனைய பகுதிகளில் வேகமாக பரவி வருவதற்கேற்ப நாங்களும் சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது.

எனவே யாழ் மாவட்டத்தை தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுமு; அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை - பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார...
பதிலடி கொடுக்க தயார் - முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் - சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்ற...
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் - விவசாய சேவைகள் திணை...

தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை - நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்து...
இன்றுமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைக்கப்பட்டது - யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்...