சர்வதேச தகவல் அறியும் உரிமை மாநாடு நாளை ஆரம்பம்!

Tuesday, September 27th, 2016

சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் ஊட­கத்­துறை அமைச்­சுடன் இணைந்து அர­சாங்க தகவல் திணைக்­களம் ஏற்­பாடு செய்­துள்ள சர்­வ­தேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்கிழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் ஆரம்பமாகின்றது.

இந்த மாநாட்டில் இந்­தி­யாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­பதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தின­ராக கலந்துகொள்ள உள்ளார் .மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்­பட்ட நாடு­க­ளி­லி­ருந்து பிர­தி­நி­திகள் கலந்­து­

கொள்­ள­வுள்­ளனர் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.அர­சாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற உட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

ஜன­நா­ய­கத்­தையும் நல்­லாட்­சி­யையும் அடிப்­படை சுதந்­தி­ர­மாக ஏற்றுக் கொண்­டுள்ள 120 நாடுகள் தமது நாடு­களில் தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறை­வேற்­றி­யுள்­ளன .

அத­ன­டிப்­ப­டையில் தகவல் அறியும் உரிமை தொடர்­பான சர்­வ­தேச மாநாடு ஒன்றை இலங்­கையில் நடத்­த­வுள்ளோம். கொழும்பில் இரண்டு நாட்­க­ளாக நடை­பெறும் சர்­வ­தேச தகவல் அறியும் மாநாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஆரம்­பிக்­கப்­படும். சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க ஆகியோர் கலந்­து­கொள்ள உள்­ள­தோடு ,இந்­தி­யாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­பதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்ள உள்ளார் .

இதற்கு மேல­தி­க­மாக வெளி­நாட்டில் குறிப்பாக தகவல் அறியும் சட்ட மூலம் அமுலில் உள்ள மேற்குறிப்பிட்ட 120 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

university-union

 

Related posts: