சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ளாது உலகளாவிய ரீதியில் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளாது உலகளாவிய ரீதியில் எம்மால் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டு விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

அவ்வாறு தனித்து இயங்க முடியுமேன நினைப்பார்களானால், இதுபோன்ற முட்டாள் தனமான கருத்து உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்வாகுமென எதிர்க்கட்சி உட்பட அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டது.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது அதனை எதிர்கொள்ளும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனித்துவம் வழங்கினார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவம் காரணமாகவே நாட்டின் நிலைமையை மாற்றியமைத்து, உரிய பொருளாதார பயணத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்ட முடிந்தது.

இதன் காரணமாகவே, சர்வதேச சமூகம் நிதியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டியிருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகின்றார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வாங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகம் தனிமனி முகத்துக்காக அல்லது அவர்கள் பேசும் ஆங்கிலத்திற்காக அவர்களது கொள்கைகளை மாற்றப்போவதில்லை.

அவ்வாறு நினைப்பார்களானால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - த...
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி !