சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகிறது. இதனால் மசகு எண்ணெய் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
இதன்காரணமாக, அந்த நாடுகளில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், டபிள்யு.டி.ஐ பீப்பாய் ஒன்றின் விலை 124 ரூபா 50 சதவீதம் வரையில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உரிய பதில் கிடைக்கும் வரை கூட்டங்களை புறக்கணிப்போம் - மிகை ஊழியர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் தீர்...
தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ர...
சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை - உரிமையாளர்களிற்கு 174,0...
|
|