சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை – உரிமையாளர்களிற்கு 174,000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்று!

Friday, March 22nd, 2024

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக சங்கானை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், வட்டுக்கோட்டை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 14 உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் சிக்கிக்கொண்டன.

மேற்படி 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் 21.03.2024 மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்றையதினமே 21.03.2024 வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உணவக உரிமையாளர்களிற்கு 174,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: