சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? – அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Wednesday, October 4th, 2023
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாட்டிலும் உள்ள ஊடகங்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கிச் செயற்படுகின்றன.
ஆனால் சமூக ஊடகங்களின் வரவை தொடர்ந்து அவரவரின் தேவைக்கேற்ற பதிவுகள் இடப்படுகின்றன.
அதனால் அனைத்து சமூக ஊடகங்களும் சர்வதேச சட்டத்துக்கு இணங்க வேண்டுமா? அல்லது நாட்டின் உள்ளக சட்டதிட்டங்களுக்கு இணங்க வேண்டுமா? என்ற கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும்.
ஐரோப்பாவில் உள்ள சட்டத்திற்கு அனைவரும் உடன்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது உலகிலுள்ள பத்திரிகை மற்றும் சஞ்சிகை உரிமையாளர்கள் விற்பனை அல்லது முதலீட்டாளர்களிடத்தில் மீளக் கையளிக்கும் செயற்பாடுகளுக்கு தயாராக உள்ளனர்.
அதனால் ஊடகத்துறையின் எதிர்கால நடைமுறையை அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள் அவதானிக்க முடியும்.
அந்த துறைசார் நிபுணர்கள் நியூயோர்க்கில் மாத்திரமின்றி இலங்கையிலும் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


