சர்வதேசம் ஒன்றிணைய வேண்டும்! – ஜனாதிபதி

Saturday, July 16th, 2016

பிரான்ஸ் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகத்தின் ஒன்றிணைவு அவசியம் தேவை என்பதை வலியுறுத்திள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் தேசிய தினத்தில் அந்நாட்டில்  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது.

நைஸ் நகர் தாக்குதலானது பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம்  தெரிவிக்கின்றேன். பிரான்ஸ் நாட்டு மக்களின் துக்கத்தில் இலங்கை பங்கேற்கின்றது.

Related posts: